Ticker

6/recent/ticker-posts

எதிர்க்கட்சி தலைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ‘டுவிட்டரில்’ விமர்சித்த கேலிச்சித்திர ஓவியர் கைது

மலேசியாவில் எதிர்க்கட்சி தலைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ‘டுவிட்டரில்’ விமர்சித்த கேலிச்சித்திர ஓவியர் கைது செய்யப்பட்டார்.
மலேசிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அன்வர் இப்ராகிம், தனது உதவியாளர் முகமது சைபுல் என்பவருடன் இயற்கைக்கு மாறாக, பாலுறவு கொண்டது தொடர்பான வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை விமர்சித்து, ஜூனார் என்று அழைக்கப்படுகிற ஜூல்கிபிளி அன்வர் ஹக் என்னும் கேலிச்சித்திர ஓவியர், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டார்.

குறிப்பாக, பிரதமர் நஜிப் ரசாக், நீதித்துறையில் தலையிட்டு, அன்வர் இப்ராகிமுக்கு தண்டனையை உறுதி செய்ததாக குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் பேரில் அவரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

Post a Comment

0 Comments