Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவை பிரதமராக்குவதற்கு எதிா்ப்பு தொிவிக்கும் பிரசன்ன ரணதுங்க !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் பிரதம வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் எதிர்ப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பிரதம வேட்பாளராக புதிய தலைவரை நியமிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மகிந்தவின் ஆதரவுகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்யின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டாவது தொடர் குறைபாடுகள் இம்முறை தேர்தலில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் மேலும் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தை பராமரிக்க கடினமாக இருக்கும் என்று கூறினார்.

Post a Comment

0 Comments