Ticker

6/recent/ticker-posts

பேய்கள் எம்மை நாய்க்கூட்டில் போடும் வரை காத்துக்கொண்டு இருக்கிறோம் -ஞானசார தேரர்

அடிப்படைவாதக் குழுக்களுக்கு வளர்வதற்கும், அவை தமது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கும் தேவையான சகல விதமான வளங்களையும் வசதி வாய்ப்புக்களையும் மனோ தைரியத்தையும் எரிபொருள் விநியோகிப்பது போன்று சந்திரிக்கா வழங்கி வருவதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இந்த சாசனத்துக்குச் செய்ய முடியுமான உயர்ந்த பட்ச இழிவை சந்திரிக்கா செய்துள்ளார்.  இவர் காளியம்மனைப் போன்ற ஒருவர். இவருக்கு மதம் என்று ஒன்று இருக்கிறதா? என்று தெரியாது.
தம்பி புதியன்ஸலாகே (தம்பி – என்பது முஸ்லிம்களை இழிவுபடுத்திக் கூற சிங்களவர்கள் பயன்படுத்தும் ஒரு சொல்) பரம்பரையைச் சேர்ந்த அல்லது நீலப்பெருமாளின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இந்நாட்டின் அரசியல் உயர் பீடங்களுக்கு வரும்போது நாட்டுக்கு, இனத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விசேடமாக கூற வேண்டியதில்லை.
சுதந்திர சதுக்கத்தில் ஷூரா சபையின் கூட்டத்தில் வைத்தும் பொதுபல சேனாவுக்கு சந்திரிக்கா ஏசியுள்ளார். பேய்கள் எம்மை நாய்க் கூடுகளுக்குள் போடும் வரையில் தான் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
இனி, நாம் பொறுத்தது போதும். மீண்டும் ஜெய்லானியிலிருந்து நாம் எமது போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.  ராஜபக்ஷ அரசாங்கமும் முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்பார்த்து இந்த போராட்டத்துக்கு நீதியைப் பெற்றுத்தராது கைவிட்டனர்.  இதற்கான நீதி கிடைக்கவில்லை எனவும் தேரர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments