நைஜீரியாவில் அட்டூழியம் செய்து வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல்பாக்தாதியை காண்பித்துள்ளனர்.
நைஜீரியாவில் தனி நாடு கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து பல குண்டுவெடிப்புகளையும், தற்கொலைப் படை தாக்குதலையும் நிகழ்த்தியதில் பலர் பலியாகியுள்ளனர்.
மேலும் நைஜீரியாவின் மத்திய வடக்கு, வடகிழக்கு ஆகிய பகுதிகளில் தீவிரவாத தாக்குதலுக்கு பயந்து இதுவரை 1.5 மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் போகோ ஹராம் தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோவில் முதன்முறையாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல்பாக்தாதியை காண்பித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து நைஜீரியாவின் யோப் மாநிலத்தில் உள்ள தமாதாரு பகுதியை தாக்கியதும் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

0 Comments