Ticker

6/recent/ticker-posts

திஸ்ஸ அத்தநாயக்க மீதான குற்றச்சாட்டு தொடர்பில் அனுர பிரியதர்ஷன, தயாசிறி ஜயசேகரவிடம் வாக்குமூலம்

போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் உடன்படிக்கையொன்று உள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் காலத்தில்  ஆவணம் ஒன்று முன்வைக்கப்பட்டமை தொடர்பில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.
இதுபற்றி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும் எனவும் 60 வீதமான படையினர் அகற்றப்படுவர் எனவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகள் நிறைவேற்றப்படும் எனவும் அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதுபோன்ற கருத்துக்கள் காரணமாக இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளாரா என இதன்போது விசாரணை செய்யப்படுகிறது. அத்துடன், 2007 ஆம் ஆண்டின் தண்டனைச் சட்டத்தின் 56 ஆவது பிரிவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கிறோம். குறிப்பாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த கருத்தின் மூலம் அந்த நிலமை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்கின்றோம்.
என்றார்.
இதேவேளை, திஸ்ஸ அத்தநாயக்கவின் போலி ஆவணத்தை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் மக்களை திசைதிருப்பிய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜாதிக ஹெல உறுமய  கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும்,  மக்களை அச்சுறுத்தலுக்கு உட்படுத்திய நபர்கள் தொடர்ந்தும் வெளியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments