Ticker

6/recent/ticker-posts

புதிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு நிஷாந்த முத்துஹெட்டிகமவை ஜே.வி.பி அழைப்பு?

எதிர்வரும் பொது தேர்தலில் புதிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
நேற்று காலியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிஷாந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான முயற்சிகள்
தற்பொழுது வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாகாணசபை உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட காலியில் நேற்று இடம் பெற்ற வேறு ஒரு நிகழ்வில் கலந்துக்காண்டு கருத்து தெரிவிக்கும்போது,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக நிஷாந்த முத்து ஹெட்டிகம பாரிய சேவைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments