Ticker

6/recent/ticker-posts

இயந்திரக்கோளாறால் விபத்துக்குள்ளாகிய தாய்வான் விமானம் : கறுப்புப் பெட்டித் தகவல்

தாய்வான் விமானம் விபத்துக்குள்ளானதற்கு இயந்திரக் கோளாறே காரணம்
என புலன்விசாரணையாளர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை விபத்துக்குள்ளாகி தைபே ஆற்றினுள் விழுந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்தே புலன்விசாரணையாளர்கள் இந்த இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
விமானம் புறப்பட்டு இரண்டு நிமிடங்களின் பின்னரே இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தது விமானிகளுக்குத் தெரியவந்திருந்ததாக விமான போக்குவரத்து பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விமானக் கட்டுப்பாட்டறையுடன் இருந்த தொடர்பை இழந்த விமானம்,  தைபே ஆற்றில் விழுந்திருந்தது. இந்நிலையில் விமானத்தில் பயணித்த 5 விமான அதிகாரிகள் உட்பட 58 பேரில் 35 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments