Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ?

ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும்  இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு விஜயராம வாசஸ்த்தலத்தில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் தற்கால, எதிர்காலங்களில் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை விடயத்தில் கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன், பிரதித்தலைவர் யோகவேள், செயலாளர் பூ.பிரசாந்தன், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆஷாத் மௌலானா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் புஸ்பகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்

Post a Comment

0 Comments