Ticker

6/recent/ticker-posts

ஹெளதி போராளிகள் யேமன் அரசாங்கத்தை கைப்பற்றியதாக அறிவிப்பு

மத்திய வளைகுடா நாடான யேமனின் அரசாங்கத்தை கையகப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள ஷியா ஹெளதி கிளர்ச்சிப்படை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளது.
இடைக்கால ஜனாதிபதிக்காக ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சபை செயல்படவேண்டும் என்று ஷியா ஹெளதி கிளர்ச்சிப்படை தொலைக்காட்சி அறிவித்தல் ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளது. இப்போது ஷியா ஹெளதி கிளர்ச்சிப்படையின் அறிவிப்பின் பின்னர் ஐ.நா. சமாதான பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம் யேமனின் தலைநகர் சைனாவை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதன் பின்னர் அந்தநாட்டின் ஜனாதிபதி அபெட் ரப்போ மன்சூர் ஹாதி ராஜிநாமா செய்யவேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டார்.
நாட்டின் அரசியல்கொந்தளிப்பினை முடிவுக்கு கொண்டுவர ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு கிளர்ச்சிப்படையினால் புதன்கிழமைவரை அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்து. அவ்வாறு எட்டப்படவில்லை என்றால் தாம் தன்னிச்சையாக செயற்படுவதாக அச்சுறுத்தியிருந்தனர்.
அரசாங்க முடிவுகளில் இனிமேல் கிளர்ச்சிப்படையின் ஆதிக்கமே இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜனாதிபதி ஹாதியின் அரசாங்கம் ராஜிநாமா செய்தபின்னர் தலைநகர் சனா கிளர்ச்சிப்படையின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும் கிளர்ச்சிப்படையை சேர்ந்தவர்கள் அந்த நாட்டின் வடக்குப்பகுதியைச் சேர்ந்த சிறுபான்மையினரான ஷியா பிரிவினராவர். எனவே அவர்களுக்கு தென்பகுதியிலுள்ள சுன்னி முஸ்லிம் தலைவர்களால்  குழப்பங்கள் ஏற்படுமென்று கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments