ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் நேற்று புதன்கிழமை இரவு முதல் சகல சோதனை நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
வடக்கின் முக்கிய நுழைவுப் பாதையில் அமைந்துள்ள ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இதற்கு முன்னர் பயணிகள் பதிவுகளை மேற்கொண்டு சோதனை நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும், சில காலத்துக்கு முன் சோதனை நடவடிக்கைகள் பகுதியளவில் நிறுத்தப்பட்டு பதிவுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே, இரண்டு நாட்களுக்கு முன்னர் பயணிகளுக்கான சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனாலும், நேற்று இரவு முதல் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

0 Comments