Ticker

6/recent/ticker-posts

மன உளைச்சலில் முடங்கி கிடக்கிறாராம் மஹிந்த ராஜபகஷ


தோல்வி அடைந்த பின்னா் தனது சொந்த ஊரான தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் வசித்து வரும் மஹிந்த. எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக அறிய வருகிறது.
அவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளாகவும் அறிய வருகிறது. விசேட மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு வந்த அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து முழு ஓய்வு எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும்அறிய வருகிறது.

இதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ  இலங்கையின் 67-வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை எனவும் தொிய வருகிறது. அவருக்கு முன்னாள் அதிபர் என்ற முறையில் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவா் அதனை புறக்கணித்தும் இருக்கிறாா்.

இதற்கிடையே சிறிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து 'தேசப்பற்றுள்ள அரசியல் முன்னணி' என்ற புதிய கட்சி தொடங்க உள்ளனர். இதில் சேருமாறு அவர்கள் மஹிந்தவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதில் சேர மஹிந்தவிற்கு அவாின் புத்திரா்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மஹிந்தவின்  தோளில் கால் வைத்து மீண்டும் ஒருமுறை பாராளுமன்றத்தில் நுழைய முயற்சிப்பதாகவும் எனவே அவர்களது அழைப்பை ஏற்க கூடாது என்றும் மஹிந்தவின் புத்திரா்கள் கூறியிருப்பதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments