Ticker

6/recent/ticker-posts

குஜராத்தில் நரேந்திர மோடிக்கு கோயில்!


குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டப்பட்டு, அங்கு பாரம்பரிய வழக்கப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கோயில் அமைக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நான்கரை லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு இருக்கும் இந்த கோயிலில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் மோடியின் சிலை வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாரம்பரிய முறைப்படி இங்கு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்று வந்தாலும்,வருகிற ஞாயிற்றுக் கிழமை முறைப்படி கோயில் திறப்பு விழா நடைப்பெற உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது தமக்கு அதிர்ச்சி தருவதாக கூறியுள்ள மோடி, இது இந்திய பாரம்பரிய கலாச்சாரத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments