முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையதிகாரியான காமினி சேனரத் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில், ஜாதிக ஹெல உறுமய இன்று வியாழக்கிழமை தேசிய வருவாய் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்ததுள்ளது. இதில் சேனரத் மேற்கொண்ட பாரிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் அடக்கப்பட்டுள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க தலைமையிலான குழுவினரே இந்த முறைப்பாட்டை முன்வைத்தனர்.
இதன்படி 2014 ஆம் ஆண்டு சேனரத், ஜனாதிபதி செயலத்தில் இருந்து கறுப்புப்பணங்களை நான்கு கறுப்புப்பைகளில் இட்டு அவரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.இதன்பின்னர் அதே ஆண்டு நான்கு பைகளில் பெருந்தொகை கறுப்புப்பணத்தை இட்டு அவற்றையும் தமது வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார்.இந்தநிலையில் கொழும்பில் 100 கோடி ரூபாய்கள் செலவில் அவர் மாடி வீடு ஒன்றை அமைத்துள்ளார்.
இதனைதவிர தமது மாமியின் பெயரில் 100 கோடி ரூபாய்கள் செலவில் வீடு ஒன்றை அவர் அமைத்துள்ளார். மாலபேயில் பல ஏக்கர் காணியில் 100 கோடி ரூபாவில் கைத்தொழில் மையம் ஒன்றை சேனரத் அமைத்துள்ளார்.பொல்கொடவிலும் அவருக்கு காணி இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
சீனர்கள் இருவரிடம் இருந்து சுமார் 200 மில்லியன் ரூபாய்களை அவர் பெற்றுள்ளார். இந்தநிலையில் தமது முறைப்பாட்டை விசாரணை செய்து ஒரு மாதத்துக்குள் பதில் தருமாறு ஜாதிக ஹெல உறுமய, தேசிய வருவாய்த்துறை திணைக்களத்திடம் கோரியுள்ளது.
- See more at: http://athavannews.com/?p=176085#sthash.0LkpuRGn.dpuf
0 Comments