Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மைத்ரியின் தமிழ்நாட்டு விஜயம் மீனவர்களுக்கு நல்ல செய்தி தருமா?

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மார்ச் 15ம் திகதி இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இவரது விஜயத்தை முன்னிட்டு, இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி சிறிசேனா இந்தியா செல்வதற்கு முன்பு இந்திய படகுகளை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

மீனவர்களும், அவர்களது படகுகளும் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களை மட்டும் விடுதலை செய்யும் இலங்கை அரசு, படகுகளை விடுவிக்காமல் இருந்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. 

இந்த நிலையில், இலங்கையில் தற்போது தமிழக மீனவர்களின் 87 படகுகள் உள்ளன. அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில், இந்தியாவில் உள்ள 18 இலங்கை மீனவர்களின் படகுகளும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Post a Comment

0 Comments