Ticker

6/recent/ticker-posts

துமிந்த சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அஜித் ரோஹண

சுமார் 20 மணித்தியால விசாரணையை எதிர்கொண்ட கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர் வெலா சுதாவிடம் இருந்து பெருந்தொகை பணம் பெற்றுவந்தமை தொடர்பிலேயே துமிந்த சில்வாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இறுதியாக வெலே சுதாவிடம் இருந்து துமிந்த சில்வா 2.5 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளார். இதனை தவிர துமிந்த சில்வா பல்வேறு நிறுவனங்களுக்கும் சமய அமைப்புக்களுக்கும் நிதியுதவிகளை மேற்கொள்வதும், அதற்கான பணம் கிடைக்கும் வழிகள் என்பன தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன் துமிந்த சில்வா வசம் இருந்த 80 வங்கிகள் மற்றும் நிதிக்கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் அவர் கைதுசெய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பொலிஸ் பேச்சாளர் , வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே துமிந்த சில்வா கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸ் குற்றத்தடுப்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு முற்பகல் 9 மணிமுதல் ,  பிற்பகல் 3மணி வரை விசாரணை செய்யப்பட்டிருந்தார். இதன் பின்னர் புதன்கிழமை முற்பகல் 11 மணிமுதல் மாலை 5 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 இந்தநிலையில் நேற்று அவர் முற்பகல் 9 மணிக்கு வரவழைக்கப்பட்டு மாலை 5 மணிவரையும் விசாரணை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments