கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்ற இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். அன்று அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருப்போது மர்ம விமானம் ஒன்று பறந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அணி வகுப்பு நடைபெற்றுகொண்டிருக்கும்போது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம விமானம் ஒன்று பறப்பது ரேடார் மூலம் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து உடனடியாக அந்த மர்ம விமானத்தை கண்டறிய சாபுவாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து 2 சுகோய்–30 ரக போர் விமானங்கள் விரைந்திருக்கின்றன. ஆனால் சிறிது நேரத்தில் அந்த மர்ம விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்து போனதாம். இந்த சம்பவம் குறித்த தகவல்கள் இப்போதுதான் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments