Ticker

6/recent/ticker-posts

மைத்திரிக்காக திருப்பதி கோவில் தங்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதாம் !

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தனது மனைவியுடன் சென்றிருந்தாா்.

அப்போது கோவிலின்  அறையில் உள்ள தங்க கதவை கோவில் ஊழியர்கள் சாவி மூலம் திறக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக சாவி உடைந்து பூட்டுக்குள் சிக்கிக்கொண்டதால் அறையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.


இதைத்தொடர்ந்து கோவில் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு தங்க கதவின் பூட்டை உடைத்து கதவு திறக்கப்பட்டதாக அறிய வருகிறது.  அதன் பின்பே கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளாா்.

Post a Comment

0 Comments