இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன தமிழகம் வந்தால் அவரது வருகையை எதிர்த்து அவருக்கு கறுப்புக் கொடி காண்பிக்கப்படும் என்று, மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன இந்தியா பயணத்தின் போது தமிழகத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்துக்கு அவர் செல்ல இருப்பதாகவும், இதை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளது தமக்கு தெரிய வந்துள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.
அப்படி மைத்ரிபால சிறிசேன தமிழகம் வந்தால் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் கறுப்புக்கொடி காண்பிக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

0 Comments