Ticker

6/recent/ticker-posts

சுப்பர் சிங்கர் ஜெசிக்காவின் ஒரு கிலோ தங்கம் - இலங்கை இந்திய அனாதைகளுக்கு வழங்கப்படும்

இந்திய விஜய் ரி.வியின் சுப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப் பிரம்மாண்டமான இறுதிச்சுற்று நேற்று சென்னை பெருங்குடியில் உள்ள தங்கவேலு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

பல கட்டத்தேர்வுக்கு பின்னர் இறுதிச் சுற்றில் பரத், அனுஷ்யா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி, ஹரிப்ரியா, சிரிஷா ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.
மக்கள் வாக்குகள் மற்றும் நடுவர்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் வெற்றி பெற்று சுப்பர் சிங்கர் (Title winner) பட்டத்தை ஸ்பூர்த்தி  கைப்பற்றியுள்ளார். மேலும் 70 லட்சம் மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி வீட்டையும் அவர் வென்றுள்ளார்.


இரண்டாவது இடத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஜெசிக்கா பிடித்தார். அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. அதை ஜெசிக்கா பெற்றுக் கொண்டதும் மேடையில் பேசிய அவரது தந்தை,  ஜெசிக்கா வெற்றி பெற்ற 1 கிலோ தங்கத்தை தமிழகத்தில் இருக்கக் கூடிய அனாதை ஆச்சிரமத்திற்கும், மீதியை ஈழத்தில் இருக்கும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு கொடுப்பதாக அறிவிப்புச் செய்துள்ளார்.

 ஹரிபிரியா மூன்றாம் இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் பரிசாக வென்றனர்.

Post a Comment

0 Comments