முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, சஜித் வாஸ் குணவர்தன, துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியாத் பந்துவிக்ரம ஆகியோரினதும் அவர்களது உறவினர்களினதும் சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் நீதிபதி கிஹான் பிலபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட 81 நிதி நிறுவனங்களில் காணப்படும் சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி இரகசியப் பொலிஸாரைக் கேட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கமைய, நிதிச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அதிகளவான சொத்துக்களை குவித்துள்ளமை தொடர்பில் நடத்தப்படவுள்ள விசாரணைக்கு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் காணி பதிவாளர் அலுவலகங்களிடமிருந்து தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

0 Comments