Ticker

6/recent/ticker-posts

காந்தியைக் கொன்றது போல கெஜ்ரிவாலையும் சுட்டுக் கொல்லுவோம் - ஸ்வாமி ஓம்ஜி மிரட்டல்


ஹிந்து மஹாசபையை சேர்ந்தவர் ஸ்வாமி ஓம்ஜி . இவர் டில்லி சட்டசபைத் தேர்தலில் பல்லிகா பஜார் என்னும் இடத்தில் போட்டியிட்டார் . இவர் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் சுயாதீனமாக போட்டியிட்டார் . 


இவருக்கு வெறும் 373 ஓட்டுக்களே கிடைத்தது . இவர் பிரச்சாரத்தில் பேச்சுக்களில் கடுமையான வார்த்தைகளினால் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கியுள்ளார் . தேர்தல் முடிவுகள் வரும் மூன்று நாட்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில் காந்தியைப் போல கெஜ்ரிவாலை சுட்டுக் கொன்றுவிடுவோம் என பேசியுள்ளார் . 

இவர் அந்த பேட்டியில் , " ஹிந்து மகாசபா எனது கட்சி , காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே எமது கட்சியைச் சேர்ந்தவர் தான் . காந்தியைச் சுட்டுக் கொன்றது போல் தேசத்திற்கு துரோகம் செய்ய நினைப்பவர்களையும் ( கெஜ்ரிவால் )  சுட்டுக் கொல்லுவோம்  " என்றார் . 

இவர் ஏற்கனவே கெஜ்ரிவாலுக்கு எதிராக புத்தகம் ஒன்றையும் எழுதி இருக்கிறாா்  என்பதுவும் குறிப்பிடத்தக்கது . 

Post a Comment

0 Comments