இலங்கையில்
67 ஆவது சுதந்திர நிகழ்வை நடாத்த, தேசிய ஷூரா கவுன்சிலுக்கு சுதந்திர
சதுக்கத்தில் இடம்கொடுத்தமைக்கு பொதுபல சேனா அமைப்பு கடுமையான கண்டனத்தை
தெரிவித்துள்ளது.
நேற்று காலை அந்த அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த
விதானகே மேற்கண்டவாறு தமது கண்டனத்தை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்;
ஷூரா சபை என்ற ஒரு அமைப்பாலே அல் கைதா அமைப்புக்கு ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நாம் இலங்கையில் உள்ள ஷூரா சபை அப்படி செய்வதாக
கூறுவதில்லை. என்றாலும் இவர்களின் வெளிநாட்டுத் தொடர்புகள், பின்புலங்கள்,
கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராயப்படவேண்டும்.
இந்நிலையில் தேசிய ஷூரா சபைக்கு சுதந்திர சதுக்கத்தில் இடம்
வழங்கப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அது சுதந்திர சதுக்கத்துக்கு
இருக்கும் கௌரவத்துக்கு அபகீர்த்தி என நாம் கருதுகிறோம் என அவர் மேலும்
தெரிவித்தார்.
.

0 Comments