முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை செய்ய கோத்தபாய ராஜபக்சவின் வீட்டுக்கு சென்ற குற்றப்புலனாய்வு பொலிஸார் அவரின் வாக்குமூலங்களை பெற்றனர்.
இதனை விசேட சலுகையாக கருதி ரவி கருணாநாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க,
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேவையான சாட்சியங்கள் இருப்பின் சாதாரண நடைமுறையின்படி கோத்தபாய ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்துக்கு
அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என்று குறிப்பிட்டார்.
கோத்தபாய முக்கியஸ்தராக கருதப்படமாட்டார் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமமாகவே கருதப்படுவர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை தமது சொத்துக்களை வெளிப்படுத்துமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு தாம் விடுத்த சவாலுக்கு இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்றும் கருணாநாயக்க தெரிவித்தார்.
0 Comments