Ticker

6/recent/ticker-posts

முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை என்றால் வீதியில் இறங்குவோம் - அனுர குமார திஸாநாயக்க

லஞ்ச, ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் சிலவற்றுக்காவது இன்னும் இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படாவிடின், வீதியில் இறங்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
கொடுக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு ஓர் இருவராவது கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு நடைபெறாது போனால், அதற்குக் தடையாக ஜனாதிபதியோ, பிரதமரோ இருந்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments