Ticker

6/recent/ticker-posts

ராஜபக்சவிற்கு சார்பாக செயல்படும் ஜோன் அமரதுங்க ?

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும், கடந்த ஆட்சியில் ஊழல்களில் சம்பந்தப்பட்டவா்களுக்கும்  எதிராக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை விசாாிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது இப்போது சா்ச்சையை கிளப்பியிருக்கிறது.

பாதுகாப்பிற்கும் காவல்துறைக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சா்கள் தாமதம் காட்டுவதாக சந்தேகம் எழுந்திருக்கிறது.
அண்மையில் ஜனாதிபதி மைத்தாிபால இந்த சந்தேகத்தை வெளியிட்டிருந்தாா். ஊழல், மோசடி குற்றங்கள் தொடா்பாக நடைபெறும் மந்தகதியிலான விசாரணைகளை  மைத்திாி கடுமையாக விமா்சித்தாா். 
இதற்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சா் ஜோன் அமரதுங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு சாதகமாக செயற்படுவதாகவும், ஊழல் மோசடி மொடா்பான விசாரணைகளை திட்டமிட்டு தாமதப்படுத்துவதாகவும் சந்தேகம் எழுந்திருப்பதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன.

Post a Comment

0 Comments