முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை சட்டவிரோதமாக அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு, சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸ் ஏற்கனவே இரண்டு முறை அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொஹான் பீரிஸ் தற்போது மூன்றாவது முறையாக ஓய்வுபெறவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி மல்வத்தை விகாரையில் மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்க தேரரை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மொஹான் பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணி என்ற வகையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரை மீண்டும் சட்டமா அதிபராக நியமித்தார். அதில் இருந்து அவர் ஓய்வுபெற்றார். மூன்றாவது முறையாக உயர்நீதிமன்றத்திற்கு வந்து ஓய்வு பெறவுள்ளார்.
உலகில் எந்த நாட்டில் ஒருவர் மூன்று முறை ஓய்வுபெற முடியும். அப்படியான அரச தொழில் எங்கு உள்ளது. இதனை தவிர மொஹான் பீரிஸ், ஜனாதிபதியின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். அமைச்சரவையின் சட்ட ஆலோசகராகவும் இருந்தார்.
லலித் கொத்தலாவவிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட செலான் வங்கியின் தலைவராகவும் மொஹான் பீரிஸ் பணியாற்றுகிறார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சட்ட ஆலோசகர், இலங்கைக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் சொப்ட் லொஜிக் நிறுவனத்தின் பங்குகளை கொண்ட பணிப்பாளராகவும் ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்திலும் பங்குகளை கொண்டுள்ள அவர், பணிப்பாளராக இருந்து வருகிறார்.
இப்படியான பல பதவிகளை கொண்டிருக்கும் மொஹான் பீரிஸிடம் இருந்து நீதித்துறை எப்படி நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியும் எனவும் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்

0 Comments