Ticker

6/recent/ticker-posts

இன்று தேர்தல் வன்முறைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம்!

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக விசேட விவாதம் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினால் விவாதம் தொடர்பான தீர்மானங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
காலை 09.30 மணி முதல் மாலை 06.30 மணிவரை விவாதம் இடம் பெறும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் எதிர்கட்சியினரின் நடவடிக்கைகளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் சிறைபடுத்தல்கள் இடம் பெறுவதாக எதிர்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.
குறித்த காரணங்கள் தொடர்பாகவே விசேட விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

Post a Comment

0 Comments