
சர்வதேச கடற்பரப்பில் தமது பிரசன்னத்தை விஸ்தரிக்கும் நோக்கத்தில் ஈரானின் 33வது கடற்படை கப்பல் தொடரணி கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இந்த தொடரணியில், பண்டார் அப்பாஸ் என்ற உதவுக்கப்பலும் நக்டி என்ற நாசகாரி கப்பலும் உள்ளடங்குகின்றன. இந்த கப்பல் தொடரணி சுமார் 5000 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டே இலங்கை வந்துள்ளன. இந்த தொடரணியில் 120 இராணுவ மற்றும் இராணுவமற்ற பிரிவுகள் உள்ளன.
அத்துடன், பல நவீன தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. ஈரானின் கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக ஈரான் அண்மைக் காலங்களில் சர்வதேச கடல் பிரசன்னத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments