Ticker

6/recent/ticker-posts

மாறிவரும் டிஜிட்டல் தொழில்நுட்பம்: வரலாறு அழியுமா?

கணினிகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சாதனங்களில் நாம் சேமித்துவைத்திருக்கும் ஏராளமான தரவுகள் மீட்கவே முடியாதபடி அழிந்துபோகக்கூடும் என்று இணையத்தின் தந்தைகளில் ஒருவர் என்று வர்ணிக்கப்படும் முனைவர் விண்ட் செர்ப் (Vint Cerf)  அச்சம் வெளியிட்டிருக்கிறார்.

கூகுள் நிறுவனத்தின் துணைத்தலைவர்களில் ஒருவரான இவர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியானது அதன் மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டிலுமே பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும், அந்த மின்னல்வேக மாற்றம் காரணமாக நாம் கணினிகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் கருவிகளில் சேமித்துவைத்திருக்கும் தகவல்கள் அனைத்துமே எதிர்காலத்தில் பயன்படுத்தவே முடியாத டிஜிட்டல் கழிவுகளாக தேங்கிவிடக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதன் விளைவாக இருபத்திஓராம் நூற்றாண்டின் மனித வரலாற்றுத்தரவுகளில் கணிசமானவை காணாமலே போய்விடக்கூடும் என்றும், எனவே எதிர்கால சந்ததிகளுக்கு இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டு என்பது இருண்டகாலமாக ஆகிவிடும் ஆபத்து இருப்பதகாவும் அவர் அச்சம் வெளியிட்டிருக்கிறார்.
இந்த சிக்கலுக்குத் தேவையான தொழில்நுட்பத் தீர்வைத் தேடுவதில் நாம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

BBC

Post a Comment

0 Comments