இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு மர்மங்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் நிலத்துக்கு அடியிலான பதுங்குகுழி கட்டமைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நிலத்துக்கு அடியில், பதுங்குகுழி போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் நடந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக பதுங்கு குழிகள் கட்டப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.
கொங்றீட்டினால் வலுவான முறையில் இந்த நிலத்தடி பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments