அன்புடன் நாச்சியாதீவு பர்வீன் .........!
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கொடும் பாவி எரிக்கப்பட்ட செய்தி -நாம் எந்த அரசியல் சிந்தனையில் வாழ்கிறோம் என்ற கேள்வியை கிழக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட பிரதேச மக்களிடத்தில் கேட்கத் தோன்றுகிறது.
ஒரு முதலமைச்சர் பதவி அதுவும் கிழக்கு மாகாண ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது அதை எனக்கு தா ? உனக்கு தா ? என்று சிறு பிள்ளைத்தனமாக கேட்டு அடம் பிடித்து அது கிடைக்க வில்லை என்றதும் மக்களை தூண்டி விட்டு அமைச்சரின் கொடும் பாவி எரிப்புக்கு அனுசரணையாக இருந்த அந்த மாகாண சபை உறுப்பினருக்கு முதல் அமைச்சர் பதவி கிடைத்திருந்தால் நன்றாகவா இருந்திருக்கும் ?
மக்கள் நலனை மதிக்காத மக்களை பகடைக்காயாக நினைத்து காலம் கடத்தும் இவ்வாரானவர்கள் அப்பதவிக்கு தகுதியே இல்லாதவர்கள் SLMC தாண்டி இவரால் மாகாண சபை வாசலை வேறு கட்சிக்கூடாக அடைய முடியுமா ?
பள்ளிகளை
உடைக்கும் பொது -இல்லை அப்படி ஒன்றும் நடக்க வில்லை முஸ்லிம்கள் இலங்கையில்
நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று கூறி அறிக்கைகள் விட்ட - அஸ்வர்
அதாவுல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் முசம்மில் போன்றோரின் கொடும்பாவி ஏன்
எரிக்கப்படவில்லை?
முஸ்லிம்களை தம்பியா மறக்கலையா தீவிரவாதிகள் என்று கடந்த காலங்களின் பேசி கேவலப்படுத்திய ஞானசாரவின் கொடும்பாவி ஏன் எரிக்கப்படவில்லை?
முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்து முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி 24 மணித்தியாலத்தில் பிறந்த மண்ணை விட்டு துடைத்தெறிந்த
பிரபாகரனின் கொடும்பாவி ஏன் எரிக்கப்படவில்லை ?
அல்லாஹ்வை மறந்து மகிந்த தான் நமது காவலன் என்று ஈமானை அடகு வைத்த பசீர் சேஹு தாவூத் , புத்தளம் பாயிஸ் , அஸ்வர் ஆகியோரின் கொடும்பாவி ஏன் எரிக்கப்படவில்லை?
அல்லாஹு -அக்பர் எனும் புத்தகத்தில் முஸ்லிம்களை பற்றி மிகக் கேவலாமாக எழுதிய அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கொடும்பாவியை ஏன்
எரிக்கவில்லை ?
முஸ்லிம்களும் தமிழர்களும் நாங்கள் கொடுக்கும் உரிமைகளை மீறி எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்று யுத்த வெற்றியின் பின்னர் சரத் பொன்சேகா கருத்து சொன்னபோது அவரின் கொடும்பாவி ஏன் எரிக்கப்படவில்லை ?
கடைசியாக -இத்தனை காலமும் சிங்களம்-தமிழ்-முஸ்லிம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று கூறி வந்த முன்னாள் ஜனாதிபதி கடைசியில்
முஸ்லிம் வேவா தெமலவெவா எயாலா ஹித்தன விதியட நட்டப்பு யுகயக் இவராய் மித்ரவருணி என்ற துவேசம் கக்கும் வார்த்தைகளை கேட்டு
அவரின் கொடும்பாவியை எரிக்கவில்லை ஏன் ?
முஸ்லிம்களை கூண்டோடு அழிக்க கங்கனம் கட்டி அலைந்த பிள்ளையான் உங்களை ஆளும் முதலமைச்சராக வந்தால் அது நல்லம் ஆனால் ஒரு முஸ்லிம் வரப்படாது -நல்ல ஆக்கள் வாப்பா நீங்கள்
இப்படி பலநூறு தடவைகள் கொடும்பாவி எரிக்கும் சந்தர்பம் கிடைத்தும் கைகட்டி பயத்தில் ஒதுங்கி பார்த்துவிட்டு ஒரு புள்ளப்பூச்சியை கொடும்பாவி என்குறீர்கள் இது ஞாயமா?தர்மமா?
இலங்கை முஸ்லிம்களின் வாழ்வாதார ,மத இன்னும் பல பிரச்சனைகளை சர்வதேசத்தின் கவனத்திற்க்கு கொண்டு சென்றது அமைச்சர் ரவூப் ஹகீம் எத்தனை அமைச்சர்கள் இருந்தும் முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு
முன் வந்து முகம் கொடுத்து அதனை தீர்ப்பதில் கரிசனை காட்டியவர் இவர் பற்றி பல நூறு விமர்சனங்கள் எல்லோருக்கும் உண்டு எனக்கும் உண்டு ஆனால் கொடும்பாவி எரிக்கும் அளவுக்கு அவர் ஒன்றும் செய்ய வில்லை ஒரு தூண்டுதலில் கொடும்பாவி எரித்து உங்களை உசுப்பேத்தி விட்ட சாக்கடையை திருப்தி படுத்தி விட்டீர்கள் -இப்போது சாக்கடை சந்தன மரமாகிவிட்டதா ?
வாழ்க உங்கள் பிரதேச வாதம் -பிடிவாதம் -பிற்போக்கு வாதம்

0 Comments