Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தான் எல்லையில் குண்டு துளைக்காத கேட்டை அமைக்கிறது இந்தியா

பாகிஸ்தானுடனான எல்லையில் குண்டு துளைக்காத எல்லைகேட்டை இந்தியா கட்ட முடிவுசெய்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே வாகா எல்லை உள்ளது. இந்த எல்லையையொட்டி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நவம்பர் 2-ம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்புடன் கூடிய அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட தயார் ஆயினர். அப்போது அங்கே வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இச்சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர். குண்டு வெடிப்பில் இந்திய தரப்பிற்கு எந்தஒரு சேதமும் ஏற்படவில்லை.
இச்சம்பவத்தை அடுத்து எல்லையில், எல்லைத்தாண்டிய தாக்குதலை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அட்டாரி, ஹுசைனிவாலா உள்ளிட்ட எல்லை கேட்களை குண்டு துளைக்காத வண்ணம் கட்ட இந்தியா முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. அட்டாரி எல்லையில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியை காண்பதற்கு அதிகமான மக்கள் வருவதும், மற்ற எல்லை பகுதிகளுக்கு குறிப்பிட்ட அளவு மக்கள் சென்று வருவதும் வழக்கமானது.

அமிர்தசரஸ் செக்டார் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எப். பாரூக்கி பேசுகையில், பாகிஸ்தான் ராணுவத்தின பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டுமே இந்திய பாதுகாப்பு படை நம்பிருக்காது. என்று கூறியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எந்தபுறத்தில் இருந்தும் பாகிஸ்தான் பகுதியில் இருந்து தாக்குதலுக்கு வழியுள்ள நிலையில், அட்டாரி எல்லையில் இரண்டு புறமும் குண்டு துளைக்காத கண்ணாடிகளை நிறுவுவதற்கு தான் முன்மொழிந்துள்ளதாகவும் பாரூக்கி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments