விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்கவின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்த பின்னர் கோட்டை நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் பாராளுமன்ற அமர்வுகளில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் திஸ்ஸ அத்தநாயக்க கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

0 Comments