முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை நாடுகடத்தும் உத்தரவு ஆவணத்தை அவரிடமே கையளிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குமார் குணரத்னம் தன்னை நாடு கடத்த வேண்டாம் என கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதனால் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருக்க குமார் குணரத்னத்திற்கு அனுமதி இல்லை.
இந்நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருமாறு குமார் குணரத்னத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை நிராகரிப்பாராயின் குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments