Ticker

6/recent/ticker-posts

ஒரு மில்லியன் மரத்தின் கதைகள்

சூழல் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு “ஒரு மில்லியன் மரத்தின் கதைகள்” என்ற தொனிப்பொருளின் கீழ், ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் இயற்கையை பேணுவதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையினை முன்னோக்கி செயற்படுத்துவோம் என்ற
செயற்பாட்டு நடவடிக்கையொன்று இன்று (20) சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடனும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 2014/2015 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப்பட்டத்தினை பெற்ற ரோலினி ஸ்ரொரஸ் பங்குபற்றுதலிடனும் விளையாட்டு அமைச்சில் இடம்பெற்றது.
இன்று அமைச்சகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் மக்கள் மத்தியில் நாட்டினை ஆரோக்கியமாக பேணுவதுடன் சுற்றுலாத்துறையினை முன்னோக்கிச் கொண்டு செல்லுதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
சூழல் துறையினை இயற்கை வளங்களை சிறந்த முறையில் பேணி அதன் மூலம் சூழல் சமத்துவத்தினை பேணுவதில் இலங்கை புதிய பயணத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்புதிய பயணம் சுற்றுலா & விளையாட்டு துறை அமைச்சின் வழிகாட்டலில் மற்றம் ரோட்டரி திணைக்கள வழிகாட்டலுடன் ஹற்றன் நஷனல் வங்கியின் அனுசரணையுடனும் நாட்டில் இடம்பெறவுள்ளது.
இவ்வகையில் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற வன திணைக்களத்தின் கணிப்பின் படி நாட்டில் காடழிப்பானது கடந்த இரண்டு தசாப்தங்களாக 53 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதனை இவ்வாறு தொடர்ந்து பேணி சூழல் சமத்துவத்தினை நிலையாக வைத்திருக்க ரோட்டரி மாவட்டம் 3220  என்ற இலக்கத்தையுடைய திட்டம் தற்போது புதிதாக ஒரு திட்டத்தினை ஆரம்பித்து அதன் மூலம் மக்களுக்கும் மரங்களுக்கும் இடையிலான நட்புறவினை வாழ்க்கை கதையை எடுத்துக்கூறுகிறது.
இத்திட்டத்தின் பெயர் “ஒரு மில்லியன் மரக் கதைகள் ” “one million tree stories” இத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன் முதற்கட்ட நடவடிக்கையாக குருநாகல் மாவட்டம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அம் மாவட்டத்திலுள்ள இரண்டு பெரிய நீர் நிலைகள் தெரிவு செய்யப்பட்டு அதன் மூலம் நீர்ப்பாசன வேலைகள் இடம்பெறவுள்ளது. நாம் அனைவரும் மரங்களை பயிரிட்டு நடுவதுடன் சரி அதற்கு பிறகு பராமரிக்கும் வேலைகளில் ஒரு போதும் ஈடுபடுவதில்லை. ஆனால் தற்போதய புதிய திட்டமானது அவ்வாறு இல்லாமல் மக்கள் மத்தியில் மரங்களின் பயனை எடுத்துரைத்து அவர்கள் மூலமாக மரக்கன்றுகளை பயிரிட்டு அதன் பின்னர் பராமரிப்பு வேலைகளிலும் ஈடுபடவுள்ளோம் என இலங்கையின் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் ரொகந்த அத்துகோரள தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இது தொடர்பான Rotarytree.com இணையத்தளமொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று ஆரம்பித்து இடம்பெற்ற இந்நிகழ்வின் தொனிப்பொருளானது மனித உணர்வுகளுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவினை தௌிவாக எடுத்துக்கூறி அதன் மூலம் மக்கள் மத்தியில் மரங்களுக்கு வழங்குகின்ற முக்கியத்துவத்தினை விளக்கும் விதத்தில் அமைந்தது. அவ்வகையில் பல மனிதர்களின் உணர்வு பூர்வமான வசனங்கள் சொற்கள் அடங்கிய காணொளிகள் திரையிடப்பட்டது . அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதன் மூலம் ஒரு மில்லியன் மரங்களின் கதைகளை மக்களிடத்தில் சேர்ப்பதுடன் அதிகமான மர நடுகைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.
இத்திட்டத்திற்கு சிறந்தமுறையில் அனுசரணை வழங்குவது HNB வங்கியாகும். அவ்வங்கி இதன் முதல் செயற்பாடாக நாடெங்கிலுமுள்ள தமது 250 கிளைகளில் இவ் “ஒரு மில்லியன் மரக் கதைகள்” என பொறிக்கப்பட்ட சின்னத்தினையும் சுலோகத்தினையும் வங்கிகளில் பொருத்தி வைத்துள்ளதுடன் அத்துடன் நாடெங்கிலுமுள்ள தமது 100  ATM இயந்திரங்களிலும் இச்சின்னத்தினை பொறித்துள்ளனர்.
இந்நடவடிக்கையின் மூலம் நாடெங்கிலும் உள்ள 4 -5 மில்லியன் மக்கள் இத்திட்டத்தின் பெறுமதியை புரிந்து கொள்வதுடன் இதில் ஒரு அங்கமாகவும் பங்குபற்ற முடியும். ஒவ்வொரு பிராந்தியங்களிலும் உள்ள ஹற்றன் நஷனல் வங்கிகள் ஒவ்வொள்றும் ரோட்டரி கழகத்துடன் ஒன்றிணைந்து தமது திட்டத்தினை செயற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 73 ரோட்டரி கழகங்கள் வங்கியுடன் இணைந்து செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாக வைத்து நோக்கும் போது இலங்கைக்கு வருகை தந்த வௌிநாட்டு பயணிகளில் 77 சதவீதமா னோர் மகிழ்ச்சி தெரிவித்தனர் அவர்களுள் 22 சதவீதமானோர் திருப்தி தெரிவித்துள்ளனர். அத்துடன் வௌிநாட்டு பயணிகளுக்காக புதிய முறையொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வௌிநாட்டு பயணிகள் நாட்டுக்கு வருகை தந்து திரும்பி செல்லும் போது தமது பிராந்தியங்களிலுள்ள ஏதாவது வங்கிகளிலோ அல்லது சர்வதேச விமான நிலையத்தில் செல்லும் போது வங்கிக் கிளைகளில் ஒரு டொலர் செலுத்தி செல்லுங்கள் . அதன் மூலம் மரம் நடுகைகளில் நீங்கள் ஈடுபடுவதன் மூலம் உங்கள் பரம்பரைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க உரையாற்றும் போது ஒரு அமெரிக்க டொலர்களை வழங்குவதன் மூலம் மரக்கன்றுகளை பயிரிட்டு அதன் மூலம் உங்கள் பரம்பரையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க முடியும். சுமார் 30 வருட கால போரினால் ஏற்பட்ட அழிவுகள் இழந்த சுற்றுலாத்துறை தற்போது முன்னிலை வகித்து வருகிறது.  கடந்த வருடத்தில் மட்டும் 1.5  மில்லியன் சுற்றுலாத்துறை பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை இதை விட அதிகரித்து இவ்வருடத்தில் 2 மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்ப்பதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க இங்கு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய உலக அழகி ரோலினி ஸ்ரொரஸ் கருத்து தெரிவிக்கும் போது இலங்கையின் இப்புதிய நடவடிக்ைகயை முன்னிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இங்கு கருத்து தெரிவித்த சர்வதேச ரோட்டரி கழகத்தின் துணைத்தவைரும் முதற்பெண்மணி சிலியா ஜியே கருத்து தெரிவிக்கும் போது இப்புதிய திட்டம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இது புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட புது வகையான திட்டமாகும். இது தொடர்பிலான திட்டத்தினை அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, பிரதியமைச்சர் வசந்த சேனநாயக்க,  2014/2015 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப்பட்டத்தினை பெற்ற ரோலினி ஸ்ரொரஸ்,சர்வதேச ரோட்டரி கழகத்தின் துணைத்தலைவர் சிலியா கிரஸ் டி ஜியே, ரோட்டரி மாவட்டசெயலர் கௌரி ராஜன், அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம்.ரபீக் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments