புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாhளர்களே இருக்கின்றாhகள் என மேல் மகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு எதிராக செயற்பட்டவர்களே அண்மையில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது தமக்கு எதிராக கூக்குரல் இட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதமர் தமக்கான அதிகாரிகளாக புதியவர்களை நியமித்துள்ள போதிலும்ää ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரிகளாக இருப்பவர்கள் அநேகர் முன்னாள் ஜனாதிபதிக்கு கடைசி நேரம் வரையில் ஆதரவளித்து வந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களை பக்கத் வைத்துக்கொள்வது ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய விமான நிலையங்களை மூடுவதாக முன்னர் அறிவித்த போதிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

0 Comments