பலதார மணம் என்பது இஸ்லாம் மதத்தின் ஒரு அங்கமல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் நீர்வளத்துறை மேற்பார்வையாளராக பணிபுரியும், குர்ஷித் அகமது கான் என்பவரை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
தனது முதல் மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்த வேளையில், திடீரென இரண்டாவது ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அகமது கான். அரசின் முன் அனுமதி பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், உத்திரபிரதேச அரசு அவரை பணி நீக்கம் செய்தது. இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு, மத சுதந்திரத்தை அரசியல் சட்டம் வழங்கியுள்ள போதும், பலதார மணம் செய்துகொள்வது இஸ்லாம் மதத்தின் ஒரு அங்கம் அல்ல என்று கூறியுள்ளது.

0 Comments