Ticker

6/recent/ticker-posts

சர்வதேச பயங்கரவாதத்துக்கு புதிய அரசு துணையாகிறது : ஞானசார தேரா்

எமது நாட்டில் மலர்ந்திருக்கும் புதிய அரசின் தொடர்ச்சியான கடந்த கால செயற்பாடுகளானது சர்வதேச ரீதியில் செயற்படும் பயங்கரவாத சக்திகளுக்கும்  உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும்  தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மன ரீதியாக தம்மை  தயார்படுத்தி  கொள்ளவும் தடையின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒரு சூழ்நிலை புதிய அரசினால் தோற்றம் பெற்றுள்ளது என பொது பல சேனாவின் பொது செயலாளர் கல­கொட அத்தே ஞானசார தேரர்  குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments