Ticker

6/recent/ticker-posts

மஹிந்த பொதுமக்கள் பணத்தை சொகுசு வாழ்க்கைக்காக பயன்படுத்தினார் ஆதாரம் உண்டு – ரவி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுமக்கள் பணத்தை சொகுசு ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தினார் என்பதனை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் உண்டு என நிதி அமை;சசர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ மக்கள் பணத்தை சுய தேவைகளுக்காக பயன்படுத்திமையை நிரூபிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி செலயகத்திற்காக 10,000 கோடி ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அவ்வாறு செலவு செய்ய தேவையில்லாவிட்டால் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள் எதுவும் இன்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments