Ticker

6/recent/ticker-posts

இலங்கை இராணுவ குழுவொன்று இன்று லெபனான் பயணம்

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் இணைவதற்காக இலங்கை இராணுவத்தின் குழுவொன்று இன்று லெபனானுக்கு சென்றுள்ளது.
இந்த குழுவில் இராணுவ அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 55 பேர் அடங்குவதாக பதில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி நான்கு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் கொண்ட மற்றுமொரு குழுவும் லெபனானுக்கு செல்லவுள்ளதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா அமைதிகாக்கும் படையில் இணையவுள்ள குறித்த அனைத்து இராணுவ உறுப்பினர்களும் விஜயபா படையணியைச் சேர்ந்தவர்கள் என பதில் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments