Ticker

6/recent/ticker-posts

இந்தியா - சீனா உறவு மேம்பட: ஆறு அம்ச திட்டம்


இந்தியா - சீனா இடையேயான உறவு மேம்பட, ஆறு அம்ச திட்டம் ஒன்றை இந்தியா முன்மொழிந்துள்ளது. சீனா சென்றுள்ள இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இத்திட்டத்தை செயல்படுத்த சீனா முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக சீனா சென்றுள்ள அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,  இந்திய - சீன ஊடக கூட்டமைப்பின்  இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், செயல்பாடு அடிப்படையிலான அணுகுமுறை, இந்தியா சீனா இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, இருநாடுகளின் நலன், பிராந்திய மற்றும் சர்வதேச நலன், புதிய துறைகளில் ஒத்துழைப்பு, நிலையான மற்றும் நீடித்த தொடர்பு, ஆகிய ஆறு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என சுஷ்மா கேட்டுக்கொண்டார். 

இதன் மூலம் ஆசியாவின் நூற்றாண்டு என்கிற கனவை இரு நாடுகளும் நிறைவேற்ற முடியும் என்று கூறினார். மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய, சீன உறவு வலுவடைய வேண்டும் என்று குறிப்பிட்ட சுஷ்மா, எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக குறிப்பிட்டார். இந்திய, சீன ஊடக கூட்டமைப்பு இருநாட்டு மக்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். 

நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, சீனா சென்றுள்ள முதல் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பயணம்,  இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

Post a Comment

0 Comments