Ticker

6/recent/ticker-posts

கோத்தாபய சொத்து விபரங்களை வெளியிடுவாரா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திரட்டிய சொத்து விபரங்களை முடிந்தால் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்திற்கு தெரிவானதாக தெரிவித்த நிதியமைச்சர், 1993ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிக்கான சொத்து விபரங்களை வெளியிட தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவற்றை ஊடகவியலாளர்கள் பார்வையிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று கோத்தபயவினால் அவரது சொத்து விபரங்களை வெளிப்படுத்த முடியுமா என நிதியமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட ஆகிய ஊடகவியலாளர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு கோத்தபாயவுக்கு உள்ளது. ஆனால், தனது பணிகளை ஒழுங்காகவே நிறைவேற்றியுள்ளதாக கூறும் கோத்தாபய, இந்த பிரச்சினை குறித்து உரிய விசாரணைகளை கூட இதுவரை முறையாக நடத்தவில்லை எனக் நிதியமைச்சர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments