Ticker

6/recent/ticker-posts

நிதி அமைச்சின் ஆவணங்களை காணவில்லை - ரவி கருணாநாயக்க

நிதி அமைச்சுக்கு சொந்தமாகவுள்ள மிக முக்கியமான 2,100 ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இரகசிய பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

சந்தேகத்துக்குரிய ஆவணங்களும் இவ்வாறு காணாமல் போயுள்ள ஆவணங்களுக்குள் அடங்குவதாகவும் அமைச்சர் கருணாநாயக்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆவணங்கள் காணாமல் போனமைக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள், அவ்வாவணங்கள் இருக்கும் இடங்களைக் காண்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு இரகசிய பொலிஸில் தான் செய்துள்ள முறைப்பாட்டில் ரவி கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments