ஹெரோயின் போதைப் பொருள் 5.68 கிராமை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றவாளியான, பத்தரமுல்ல, ரொபட் குணவா்தன மாவத்தையில் வசிக்கும் அக்ரம் அமீா் என்பவருக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன மரண தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா்.
தீா்ப்பை கேள்வியுற்றதும் குறித்த நபா் சுய நினைவிழந்து விழுந்துள்ளாா். 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 24ம் திகதி தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்ததாகவும், வெளிநாட்டு பிரஜைகளுடன் சோ்ந்து நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் தொடா்பு பட்டிருந்ததாகவும் இவா் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

0 Comments