Ticker

6/recent/ticker-posts

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் அசாத் சாலி !– ஞானசார தேரர்

மத்திய மாகாணசபையின் உறுப்பினர் அசாத் சாலி இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை சீர்குலைக்கும் அசாத் சாலியின் நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கம், முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
அசாத் சாலியின் நடவடிக்கைகளை நிறுத்துவது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்கும்.
நுகேகொடை கூட்டம் பௌத்த கொடிகளுடன் நடத்தப்பட்ட கடும்போக்குடைய இனவாத கூட்டம் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
பௌத்த நாடொன்றில் பௌத்த கொடிகளை ஏந்திச் செல்வது தவறான செயற்பாடா?
இந்த நாடு எது? நாட்டின் சூழ்நிலை என்ன? மக்களின் உணர்வுகள் என்ன என்பது பற்றி அசாத் சாலிக்கு புரியவில்லை.
நுகேகொடை கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றுள்ளனர், இதன் அடிப்படையில் அசாத் சாலி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருலப்பணையில் அமைந்துள்ள போதி பௌத்த கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments