Ticker

6/recent/ticker-posts

சீனாவுடன் நிலவும் வலுவான உறவு தொடரும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவுடன் நிலவும் வலுவான உறவு தொடரும் என நேற்று உறுதியளித்தார். 

சீனாவின் புத்தாண்டை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

சீன ஜனாதிபதி கடந்த செப்டம்பரில் இலங்கைக்கு வந்த போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டதாக மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சீனாவின் புதிய வருடத்தில் இலங்கையுடனான உறவு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை வென்று, ஜனவரி 9 ஆம் திகதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது. 

சீனா இலங்கைக்கு ஒரு நெருங்கிய நண்பன் எனவும், சீன இராசி படி 2015 ´ஆடு ஆண்டு. எனவே இந்த ஆண்டில் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு வருடமாக இது அமையும் எனவும் ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments