வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் புதிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் எந்த முயற்சியும் சிக்கலான நிலைமையை ஏற்படுத்தக் கூடுமென இந்திய மத்திய அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாகவும் ஆனால், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தை அளவிடுவதற்கு முன்னரே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைகளுக்கு இந்தியா எப்போதுமே எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் மோடிக்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் இடையில் விரைவில் இடம்பெறவுள்ள பேச்சுக்களின் போது, நல்லிணக்கம் மற்றும் தமிழHகள் வாழும் பகுதிகளின் புனர்வாழ்வு என்பன முக்கியமான விவகாரங்களாக இருக்கும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments