தொழில்நுட்ப நிறுவனங்களில் உலக அளவில் முன்னணியில் திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 700 பில்லியன் டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. உலக அளவில் இது முக்கிய வர லாறாக கருதப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய நிலவரப்படி அமெரிக்க பங்குச் சந்தையில் 122 டாலர் என்கிற விலையில் வர்த்தகம் ஆனது.
இதற்கு முன்பு கலிபோர்னி யவைச் சேர்ந்த கூப்பர்சினோ நிறுவனம் 700 பில்லியன் டாலர்கள் என்கிற சந்தை மதிப்பு கொண்டிருந்தது. தற்போது முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் இந்த அளவை எட்டியுள்ளது.
நியூயார்க் பங்குச்சந்தையான நாஸ்டாக் பங்குச்சந்தையில் பிப்ரவரி 10ம் தேதி நிலவரப்படி ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 710.7 பில்லியன் டாலராக முடிவடைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பை, சந்தை முடியும் நேரத்தில் உயர்ந்துள்ள பங்கின் விலை, நிலுவையிலிருக்கும் பங்குகள் என்ணிக்கை இவற்றைக் கொண்டு முடிவு செய்கின்றனர். இதனடிப்படையில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்து அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களாக ஸ்டாண்டர்டு அண்ட் பூர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கிறது. இதற்கடுத்து எக்சான் மொபைல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 385 பில்லியன் டாலராகவும், பிரேக்ஷேர் ஹாத்வே மதிப்பு 370 பில்லியன் டாலராகவும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு 349 பில்லியன் டாலராகவும் இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் 2012 ஆண்டிலேயே 600 பில்லியன் சந்தை மதிப்பை எட்டியிருந்தது. இந்த ஏற்றம் குறித்து பேசிய சந்தை நிபுணர்கள் ஆப்பிள் பங்குகள் அதிக மதிப்பு கொண்டு தலைமை வகிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்பிள் நிறுவம் கடந்த செப்டம்பரில் கொண்டுவந்த புதிய ஐபோன் மாடல் அதிக அளவில் விற்பனையானது. இந்த நிறுவனம் தனது நான்காவது காலாண்டில் 18 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
0 Comments