Ticker

6/recent/ticker-posts

விமுக்தி அரசியலுக்கு வர மாட்டார் – சந்திரிக்கா

எனது மகன் விமுக்தி அரசியலுக்கு வர மாட்டார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கட்டுகஸ்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments