ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடிய செயல்களை கண்டித்துள்ள இந்திய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அஸதுத்தீன் உவைஸி, அவர்களின் செயல்பாடுகளுக்கும் இஸ்லாத்தும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஹைதரபாத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு அஸதுத்தீன் உவைஸி பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ”அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்வது மட்டுமல்லாமல் கொலையும் செய்து இருக்கின்றனர். இரத்த களறியில் மிதக்க விட்டு கொலை செய்கின்றனர். உடலை துண்டு துண்டாக்குகின்றனர். தலையை துண்டிக்கின்றனர். ஒரு மனிதரை உயிரோடு எரித்து கொலை செய்கின்றனர். இஸ்லாமிய போதனைகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் கொடூர கொலைகாரர்கள்” என்று தெரிவித்தார்.ஹைதராபாத்தை சேர்ந்த சில இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர முயற்சி செய்ததாக வெளியான தகவல் குறித்து கேட்ட போது, சட்டத்தை யாரும் மீறக்கூடாது என்று தெரிவித்தார்.

0 Comments